ஒப்புகைகள்-Oppukaikal #augustinepalli #staugustinelife #oppukaikal #augustine #tamilaudiobook #confessions Welcome to Augustine Palli! We present the Conclusion of the Tamil audiobook of St. Augustine's 'Confessions', translated as 'Oppukaikal'. Explore this spiritual and philosophical masterpiece in Tamil. பேரிக்காய்! தன் 12ஆம் வயதில் பேரிக்காய்களைத் திருடியது தன் பசிக்காக அல்ல, மாறாக, தன் ஆசைக்காக என அறிக்கையிடும் இனியவர் ஒருவர், பசிக்கும் ஆசைக்கும், தேவைக்கும் விருப்பத்திற்கும், நன்மைக்கும் இன்பத்திற்கும் இடையே தான் பட்ட இழுபறி நிலையை எண்ணிப் பார்த்து, கட்டிலின் இன்பத்திலிருந்து தன்னாளுகைக்கும், இறுமாப்புநிறை பார்வையிலிருந்து தன்னறிவுக்கும், உலகுசார் பேராவல்களிலிருந்து ஆன்மீகம்சார் அமைதிக்கும் புறப்பட்டுச் செல்லும் பயணத்தின் பதிவுகளே அகுஸ்தினாரின் ஒப்புகைகள். • மனித உறவுகள் தரும் இன்பப் பிணைப்பு, பிணைப்போடு வரும் பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மற்றும் சண்டை சச்சரவுகள், • அறிவுக்கான தொடர்தேடல், தேடலின் இறுதியில் மிஞ்சும் விரக்தி, • அடுத்தவரை மகிழ்வித்து அவர் தரும் புகழால் அடையும் களிப்பு, புகழ் தரும் வெறுமை, • பேருண்டி தரும் நிறைவு, நிறைவுக்குப்பின் வரும் வலி மற்றும் நோய். • புலன்கள் தரும் மயக்கம், மயக்கத்தின்பின் வரும் குழப்பம், • அமைதிக்கான தேடல், தேடலில் திசைமாறும் பயணங்கள் என்னும் நம் இன்றைய வாழ்வியல் அனுபவங்களின் நான்காம் நூற்றாண்டுக் கண்ணாடியே அகுஸ்தினாரின் ஒப்புகைகள். இலத்தீன் பாடத்திலிருந்து, இத்தாலியன், மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் துணைகொண்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், (அ) அகுஸ்தினாரின் காலக்கோடு, (ஆ) ஒப்புகைகள், (இ) நூல் பின்புலம், மற்றும் (ஈ) விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அமைதி, நிறைவு, மற்றும் மகிழ்ச்சி என்னும் நம் வாழ்வியல் தேடல்களின் திசைகாட்டியாகவும், வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் உடன் வருகிறது அகுஸ்தினாரின் ஒப்புகைகள். Oppukaikal Book on Amazon: https://rb.gy/9d0v9p *************************************************************************** Special Credits : Translation & Narration: - Fr. Yesu Karunanidhi Copyright: Yesu Karunanidhi Book Published by: Tamil Ilakkiya Kazhagam Audiobook Published by: Augustine Palli - E. Sathish David https://www.linkedin.com/in/sd1975/?o... Audiobook Technical Team: Charles and PaulAudio Mastering: Chris Daniel Designs: Yasar