『The Salary Account | Hello Vikatan』のカバーアート

The Salary Account | Hello Vikatan

The Salary Account | Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

Finance குறித்து உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விகடன் வழங்கும் 'The Salary Account podcast'Hello Vikatan 個人ファイナンス 経済学
エピソード
  • நல்ல பில்டரை அடையாளம் காண்பது எப்படி? | The Salary Account Podcast-40
    2023/08/29

    சொந்தமாக ஒரு வீடு, என்பதுதான் சம்பளதாரர்கள் பலருடைய வாழ்நாள் கனவே. ஆனால், அண்மைக்காலமாக பிரபல பில்டர்களின் அபார்ட்மென்ட்டுகள் குறித்து வரும் செய்திகள் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளன. கட்டி சில ஆண்டுகளே ஆன குடியிருப்புகளில் விரிசல்கள் விழுவதும், அடிக்கடி பழுதுகள் ஏற்படுதுவதும் அதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் போராடுவதும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும் குழம்பிப்போயிருக்கின்றனர். எப்படி சிறந்த பில்டர்களைத் தேர்வு செய்வது, இதுபோன்ற சிக்கல்கள் எழுந்தால் என்ன செய்வது என உங்கள் பலரிடமுமே கூட எக்கச்சக்க கேள்விகள் இருக்கலாம். அவற்றிற்கு விடையளிக்கும் விதமாக, நாணயம் விகடனிடம் 'பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர் அசோசியேஷன்’ தலைவர் மணி சங்கர் பகிர்ந்துகொண்ட வழிகாட்டல்கள், இந்த வார் The Salary Account எபிசோடில் இடம்பெறுகின்றன.

    -The Salary Account Podcast.

    続きを読む 一部表示
    8 分
  • டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள்: இத்தனை நன்மைகளா? | The Salary Account Podcast
    2023/08/19

    இன்னும்கூட பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருந்தாலும், தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஃபோலியோ வடிவத்திலேயே வைத்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை டீமேட் வடிவில் வைத்திருப்பதன் நன்மைகளை அவர்கள் உணராமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சிலர், டீமேட் வடிவில் ஃபண்ட் யூனிட்டுகளை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அவர்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஏற்கெனவே டீமேட் வடிவில் இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுடைய ஃபண்ட் யூனிட்டுகள் பாரம்பர்ய ஃபோலியோ வடிவில்தான் இருக்கின்றன. இதுகுறித்து இன்றைய எபிசோடில் விரிவாகப் பார்ப்போம்.

    -The Salary Account Podcast

    続きを読む 一部表示
    7 分
  • உச்சத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | The Salary Account Podcast
    2023/08/12

    பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பலரும் தங்கள் முதலீடுகளை இங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் இவற்றில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கெனவே முதலீடு செய்திருந்தாலோ என்ன செய்ய வேண்டும்?

    -The Salary Account

    続きを読む 一部表示
    5 分

The Salary Account | Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。