エピソード

  • Edapadi-யிடம் டீல்போட்ட Ramados? & ஷாக் தரப்போகும் Amit shah மூவ்! | Elangovan Explains
    2025/02/22

    'டார்கெட் 200' அதை அடைவதற்காக ஸ்டாலினுக்கு புது ரூட்டை போட்டுக் கொடுத்துள்ளனர் மகனும் மருமகனும். அது சமுதாய ரீதியிலான கவரேஜ். இன்னொரு பக்கம், தன் மகனுக்கு ஒதுக்கிய மாவட்டத்தின் மூலமாக அப்செட் பொன்முடி. ஆறுதல் தந்த மு.க ஸ்டாலின். அடுத்து, எடப்பாடியை சந்தித்த ஜி.கே மணி. சீக்ரெட் டீல் போட்டு இருப்பதாக தகவல். இன்னொரு பக்கம் எடப்பாடியிடம், ஆர்.பி உதயகுமார் ஃபீலிங்கோ ஃபீலிங். ஆறுதல் கொடுத்து, நம்பிக்கை கொடுத்த எடப்பாடி.

    続きを読む 一部表示
    18 分
  • ரிஜெக்ட் செய்த BJP, ஆக்‌ஷனில் இறங்கும் STALIN, காரணம் Annamalai! | Elangovan Explains
    2025/02/21

    தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ 5000 கோடி தர முடியாது என மீண்டும் தெரிவித்த மத்திய பாஜக அரசு.

    இதை எதிர்த்து அடுத்தகட்ட திட்டங்களைத் தீட்டும் ஸ்டாலின்...

    இன்னொருபக்கம், தமிழ்நாடு வரியாக மத்திய அரசுக்கு

    கொடுத்தது ரூ 8.04 லட்சம் கோடி...திரும்பி

    வந்தது ரூ 1.58 லட்சம் கோடி...

    தமிழ்நாட்டை

    புறக்கணிக்கிறதா பா.ஜ.க? அடுத்து,

    'உதயநிதி Vs அண்ணாமலை' இந்த புதிய

    Getout war - க்கு பின்னே உள்ள சீக்ரெட் அஜெண்டா.

    続きを読む 一部表示
    16 分
  • ஷாக்கில் Senthil Balaji, நெருக்கடியில் Edapadi, மாறும் கேம் பிளான்! | Elangovan Explains
    2025/02/20

    அமலாக்க துறையின் அடுத்த நகர்வால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் என்கிறார்கள். அவருடைய பதவிக்கு மீண்டும் ஆபத்து, ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர். என்ன நடக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில்? இன்னொரு பக்கம், அடுத்தடுத்த தொடர் நெருக்கடிகள். முக்கியமாக டெல்லி தரும் அழுத்தம். இதனால் அதிமுகவில், ஓயாத குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சமாளிக்க , புது ஆட்டத்தை தொடங்கியுள்ள எடப்பாடி. வொர்க்அவுட் ஆகுமா?

    続きを読む 一部表示
    13 分
  • Stalin-ஐ கொதிப்படைய வைக்கும் மாவட்டங்கள் & மந்திரிகள்...அடுத்த அதிரடி ஸ்டார்ட்! | Elangovan Explains
    2025/02/19

    மீண்டும் மொழிப்போருக்கு தயாராகும் திமுக ஆனால் அதை வெல்லக்கூடிய வகையில் உட்கட்சி பலமாக உள்ளதா? மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகள். இதனால் கடும் அதிர்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள். இதை சரி செய்ய மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், புதிய மாவட்டங்களை உருவாக்கியும் வருகிறார் மு.க ஸ்டாலின் மேலும், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் இருக்கிறார். எனவே திமுகவில் காத்திருக்கிறது பல்வேறு அதிரடிகள் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

    続きを読む 一部表示
    19 分
  • Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி?! | Elangovan Explains
    2025/02/18

    ஓ.பி.எஸ் - ஆர்.பி உதயகுமார் இடையிலான சீரியஸான வார்த்தை போர், இன்னொரு பக்கம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்? இதில் டெல்லி குளிர் காய்கிறதா?

    இன்னொரு பக்கம் நான்கு ஷாக் ட்ரீட்மென்ட்களை கொடுக்கும் பா.ஜ.க. இதனால் நெருக்கடியில் எடப்பாடி? என்ன நடக்கிறது அ.தி.மு.க-வை சுற்றி? டெல்லி போடும் கண்டிஷன் என்ன? பரபரப்பு பின்னணிகள்.

    続きを読む 一部表示
    14 分
  • Modi மூவ், முறியடிக்க Stalin கையிலெடுக்கும் 'அஸ்திரம் 1965?' | Elangovan Explains
    2025/02/18

    மீண்டும் மும்மொழிக் கொள்கை...

    தி.மு.க Vs பா.ஜ.க

    மூர்க்கமான போர்!



    ஸ்டாலின் கையிலெடுக்கும் 1965 டைரி...

    மீண்டும் மொழிப் போராட்டம்?!

    続きを読む 一部表示
    12 分
  • List 2 ரெடி...பதறும் மந்திரிகள்...சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains
    2025/02/15

    திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். 'டார்கெட் வெஸ்ட்' என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டும் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், 'தங்கள் மாவட்டங்களும் அடங்குமோ?!' என அலறும் அமைச்சர்கள். முக்கியமாக, சென்னை அமைச்சர்கள். இப்படியாக, ஆக்சன், அதிரடியில் இறங்கிய ஸ்டாலின்.

    続きを読む 一部表示
    21 分
  • சவுண்ட் விட்ட செங்கோட்டையன், சரிகட்டிய EPS, பின்னணியில் அரசியல் கேம்! | Elangovan Explains
    2025/02/14

    ஒரு பக்கம் செங்கோட்டையன், மறுபக்கம் தேர்தல் கமிஷன் பின்னணியில் பாஜகவின் கேம் என டோட்டலாக ஆடிப் போயிருக்கும் எடப்பாடி. இதில் செங்கோட்டையனை சரிகட்ட சமாதான குழுவையும் அனுப்ப, அதன் பிறகு மாறிய காட்சிகள். தேர்தல் கமிஷனை சமாளிக்க, புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. என்ன நடந்து கொண்டிருக்கிறது அதிமுகவில்?

    続きを読む 一部表示
    17 分